போதையில் கார் ஓட்டிய நபரால் உயிரிழந்த போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரி!
- Shan Siva
- 04 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 4: பகாங், பெரா அருகே போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஓட்டிவந்த எம்பிவி வாகனத்துடன் தேசிய போதைப்பொருள்
தடுப்பு முகமையின் அதிகாரியின் கார் மோதியதில், அந்த அதிகாரி உயிரிழந்தார்.
எம்பிவி ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட சோதனையில் எரிமின் 5 போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது
உறுதிசெய்யப்பட்டதாகவும்,
போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக விசாரணைக்காக அவர் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாகவும் பெரா காவல்துறைத் தலைவர் சுல்கிஃப்ளி நசீர்
தெரிவித்தார்.
காலை சுமார் 10 மணியளவில் நடந்த இந்த விபத்தில், 37 வயது
போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஷெரீஃப் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர்
கூறினார்.
எம்பிவி வாகனத்தில் பயணித்த 29 வயது நபருக்கும், 25 வயது பயணிக்கும் காலில் லேசான காயங்கள் ஏற்பட்டதாக சுல்கிஃப்ளி தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



