வீட்டில் போதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு- எம்ஏசிசியின் துணை அரசு வழக்கறிஞர் கைது!

top-news
FREE WEBSITE AD

வீட்டில் போதைப் பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து எம்ஏசிசியின் துணை அரசு வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.சம்பந்தப்பட்ட துணை அரசு வழக்கறிஞர் ஒரு வாரத்திற்கு முன்பு தான் எம்ஏசிசியில் பணியை தொடங்கினார்.

இந்நிலையில் அவர் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அந்த நபர் நேற்று அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.மேலும் சோதனையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் தடைசெய்யப்பட்ட
பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த விஷயத்தில் மேலும் விசாரணைகளை நடத்துவதை எம்ஏசிசி அதிகாரிகளிடம் முழுமையாக விட்டுவிடுகிறது. மேலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் உறுதி செய்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கைதான அந்நபர் விசாரணைக்கு உதவும் நோக்கில் 3 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *