கிள்ளான் பள்ளத்தாக்கில் சிக்கிய 1.53 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருள்! 6 பேர் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 20: கிள்ளான் பள்ளத்தாக்கில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கூட்டரசுக் காவல்துறை போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) முறியடித்ததன் மூலம் மொத்தம் RM1.53 பில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் பல இடங்களில் உளவுத்துறை தலைமையிலான தொடர் சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் மிகப்பெரிய பறிமுதல்களில்  மேற்கொள்ளப்பட்டதாக அதன் இயக்குனர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

செராஸ் பகுதியில் நடத்தப்பட்ட முதல் சோதனையில் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் MDMA இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆறு திரவ பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன, அதன் எடை 3 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது.

 தாமான் டெய்ன்டன் வியூ பகுதியில் நடந்த இரண்டாவது சோதனையில் சுமார் 738 கிலோ எடையுள்ள கோகைன் என சந்தேகிக்கப்படும் வெள்ளைப் பொடி, சுமார் 3,303 கிலோ எடையுள்ள கோகைன் என சந்தேகிக்கப்படும் திரவம் மற்றும் பல்வேறு போதைப்பொருள் பதப்படுத்தும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக நகர காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

காஜாங்கில் உள்ள சுங்கை சுவா தொழில்துறை பகுதியில் உள்ள வளாகத்தில் மூன்றாவது சோதனை நடத்தப்பட்டதாகவும், அங்கு போலீசார் சுமார் 3,024 கிலோ எடையுள்ள கெத்தமைன் என சந்தேகிக்கப்படும் வெள்ளைப் பொடி, சுமார் 10,067 கிலோ எடையுள்ள கெத்தமன் என  சந்தேகிக்கப்படும் திரவம் மற்றும் பல்வேறு போதைப்பொருள் பதப்படுத்தும் உபகரணங்களை பறிமுதல் செய்ததாகவும் ஹுசைன் மேலும் கூறினார்.

காஜாங்கில் உள்ள தாமான் இண்டஸ்ட்ரி மெகா, பண்டார் டெக்னாலஜியில் உள்ள வளாகத்தில் அடுத்தடுத்த சோதனை நடந்தது, அங்கு போலீசார் 28 வெள்ளை சாக்குகளை பறிமுதல் செய்தனர். அதில் கெத்தமைன் என சந்தேகிக்கப்படும் வெள்ளைப் பொடியால் நிரப்பப்பட்ட , 1,402 கிலோ எடையுள்ள 1,400 மஞ்சள் பிளாஸ்டிக் பொட்டலங்கள், கூடுதல் போதைப்பொருள் பதப்படுத்தும் கருவிகள் ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருட்களில் சுமார் மூன்று கிலோ எடையுள்ள எம்டிஎம்ஏ, தோராயமாக 4,041 கிலோ எடையுள்ள கோகோயின் மற்றும் சுமார் 14,493 கிலோ எடையுள்ள கெத்தமைன் ஆகியவை அடங்கும் என்று ஹுசைன் கூறினார்.

சுமார் 68.5 மில்லியன் போதைப் பித்தர்களுக்கு தீங்கு விளைவித்திருக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

முதல் சந்தேக நபர் சேமிப்பு வசதிகளின் தலைமை பாதுகாவலராகவும், உதவி வேதியியலாளராகவும் பணியாற்றினார் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் நான்காவது மற்றும் ஆறாவது சந்தேக நபர்கள் சட்டவிரோத போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகங்களாகப் பயன்படுத்தப்படும் குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை நிர்வகிப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதன் செயல்பாடு சர்வதேச சந்தைக்கானதாக நம்பப்படுவதாகவும், ஏப்ரல் முதல் இந்த கும்பல் செயல்பட்டு வருவதாகவும் கருதப்படுகிறது.

கும்பலின் அளவு காரணமாக, பல சரக்குகள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை உட்பட குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படும் என்றும் ஹுசைன் கூறினார்.

ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையில் முதல் சந்தேக நப இருப்பது கண்டறியப்ர் கெத்தமைன் பயன்படுத்தியது தெரியவந்தது. நான்காவது மற்றும் ஆறாவது சந்தேக நபர்களுக்கும் மெத்தம்பெத்தமைன் மற்றும் கெத்தமைன் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஆறு சந்தேக நபர்களும் புதன்கிழமை முதல் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

RM389,000 மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன, ஆபத்தான மருந்துகள் (சொத்து பறிமுதல்) சட்டம் 1988 இன் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹுசைன் கூறினார். லாரி உட்பட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *