கோலாலம்பூர் வட்டாரத்தில் வெ 1 கோடியே 77 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

 கோலாலம்பூர், ஆக. 5: கடந்த மாதம் 29ஆம் தேதி பிற்பகல் 2.10 மணியளவில் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் ஸ்ரீ ஹத்தாமாஸில் உள்ள வீடு ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் பிரிவு இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.

அந்த வீட்டிலுள்ள 30 வயதான உள்நாட்டு ஆடவரைக் கைது செய்து சோதனை மேற்கொண்டதில் அந்த வீட்டிலிருந்து 225 பொட்டலங்களில் ஷாபு வகை போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 234 கிலோகிராம் என்று அவர் கூறினார்.

மேலும் மற்றோர் அறையில் 200 பொட்டலங்களில் கெத்தமின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதன் எடை 205.7 கிலோகிராம் என்று அவர் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு வெ.ஒரு கோடியே 77 லட்சத்து 80ஆயிரம். இந்த போதைப்பொருள் கிட்டத்தட்ட  18 லட்சத்து 55ஆயிரத்து 677 பேர் உபயோகிக்கக்கூடியது என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3 கார்கள், 3 கைக்கடிகாரங்கள், பலவகையான நகைகள், ஒரு கைத்தொலைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 93ஆயிரத்து 350 வெள்ளி என்று   டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.

இதனிடையே மற்றொரு சம்பவத்தில் பிரிக்பீல்ட்ஸ் போதைப்பொருள் குற்றப் பிரிவுத் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 14 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த மாதம் 29ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் தாமான் கூச்சாய் எண்டர்பிரினர்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் மேற்கொண்ட சோதனையில் ஓர் உள்நாட்டு ஆடவர், 2 வெளிநாட்டு ஆடவர், 2 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 8 அட்டைப் பெட்டிகளில் 91 பொட்டலங்களில் கஞ்சாப் பூ போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதன் எடை 42.3 கிலோகிராம் ஆகும். இதன் மதிப்பு 14 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி என்று அவர் சொன்னார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கிட்டத்தட்ட 84 ஆயிரத்து 520 பேர் உபயோகிக்கக்கூடியது.

கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 39பி சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை அல்லது ஆயுள்தண்டனை, 12 பிரம்படிகள் வழங்குவதற்கு சட்டத்தில் இடமுள்ளதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *