RM 17.8 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்! - காவல்துறை அதிரடி
- Shan Siva
- 18 May, 2026
கோலாலம்பூர், மே 18: இந்த மாத தொடக்கத்தில் கே.எல்.ஐ.ஏ
மற்றும் அம்பாங் ஜெயா பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில், நான்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை
காவல்துறை முறியடித்து, 17.8 மில்லியன் ரிங்கிட்
மதிப்புள்ள கஞ்சா மற்றும் மெத்தம்பெத்தமைன் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தது.
மே 6 முதல் 11 வரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளின் விளைவாக, ஒரு மலேசிய ஆண், மூன்று வெளிநாட்டு ஆண்கள் மற்றும் மூன்று வெளிநாட்டுப்
பெண்கள் என ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர்
ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
172.8 கிலோ கஞ்சா பூக்கள்
மற்றும் 79 கிலோ மெத்தம்பெத்தமைன்
அடங்கிய 17.8 மில்லியன் ரிங்கிட்
மதிப்புள்ள 251.8 கிலோ போதைப்பொருட்களை
காவல்துறை பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட
இந்த அளவு, சுமார் 839,000 போதைப் பித்தர்களுக்கு விநியோகிக்கப்
போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில்
தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



