கூரியர் அலுவலகத்தில் RM 10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் - சொகுசு வாகனங்கள் பறிமுதல்!
- Shan Siva
- 10 Sep, 2025
கோலாலம்பூர், செப் 10: கோத்தா கினாபாலுவின் கெபாயனில் உள்ள ஒரு கூரியர்
சேவை வளாகத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில், RM1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 20.7 கிலோ கெத்தமைனை
போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த
வியாழக்கிழமை நடந்த சோதனையின் போது, சொகுசு வாகனங்கள், கணினிகள் மற்றும்
RM3.18 மில்லியன்
மதிப்புள்ள பிற பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக சபா போலீஸ் கமிஷனர் ஜௌதே
டிகுன் தெரிவித்தார்.
சோதனையின் போது
20 பாக்கெட்டுகள் கொண்ட கெத்தமைனை கண்டுபிடித்ததோடு, பின்னர் முக்கிய சந்தேக நபரான ஒருவரை கைது செய்ததாக அவர் கூறினார்.
அந்த முக்கிய சந்தேக நபரை விசாரித்ததில் செப்டம்பர்
5 ஆம் தேதி ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் பெர்னாமா அறிக்கையில் கூறினார்.
40 கிலோவிற்கும்
அதிகமான மெத்தம்பெத்தமைனை பறிமுதல் செய்வதில் வெற்றி பெற்ற ஒரு வாரத்திற்குப்
பிறகு இந்த பறிமுதல் நடந்ததாக அவர் கூறினார்.
நான்கு சந்தேக
நபர்களும் செப்டம்பர் 11 வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



