CIKGU CHANDRA வீட்டின் மீது தாக்குதல்! நிதி கோரிக்கை விடுக்கும் CIKGU CHANDRA!
- THINAGAREN SANGGAREN
- 09 Mar, 2026
மார்ச் 9,
இந்து கோயில்களுக்கு எதிராகப் பல செயல்களைப் புரிந்து வரும் கூட்டத்தினருக்கு ஆதரவாகக் காணொலிகளை வெளியிட்டு வந்த CIKGU CHANDRA எனும் ஆடவரின் வீட்டை மர்ம கும்பல் தாக்கியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய வாகனத்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டிருப்பதாக CIKGU CHANDRA காணொலியைப் பதிவேற்றியதுடன் இதைச் சரி செய்ய தனக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
CIKGU CHANDRAவுக்கு நிதியுதவி அளிப்பது மட்டுமின்றி அவருடைய பாதுகாப்பிற்காக வீட்டில் CCTV அமைக்கவும் இஸ்லாமிய அமைப்புகள் முன் வந்திருப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள காணொலிக்கு ஒரு சில இஸ்லாமிய அமைப்பினர்கள் கருத்துகள் வெளியிட்டு வருகின்றனர். ரவாங்கில் உள்ள கோயிலை உடைக்கும் கும்பலுடன் இணைந்து CIKGU CHANDRAவும் அந்த கோயிலைச் சுத்தியலால் உடைக்கும்படியானக் காணொலி சமூகவலத்தலங்களில் பரவியது. FIRDAUS WONG, ZAMRI VINOTH போன்ற கும்பலுடன் இணைந்து கோயில்களுக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைப் பரப்பி வரும் CIKGU CHANDRA தற்போது தாக்குதலிலிருந்து மீண்டு வர நிதியுதவி அளியுங்கள் என சமூகவலைத்தலங்களில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



