தீ விபத்தில் கருகிய வீடும் வாகனமும்!

top-news

ஜூலை 4,


நேற்றிரவு Kampung Rampayan Laut குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுமையாகத் தீயில் கருகியது. அதிகாலை 1.28 மணிக்குத் தீ விபத்து குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 7 தீயணைப்பு மீட்பு ஆணைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகச் சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய அதிகாரி Clarice Jimoh தெரிவித்தார். தீயினால் பாதிக்கப்பட்ட வீடு பலகையிலானது என்பதால் தீ வேகமாகப் பரவியதாகச் சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய அதிகாரி Clarice Jimoh தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாதது உறுதிச்செய்யப்பட்டதாகவும் வீடும், வீட்டின் முன்னிருந்த வாகனம் முழுமையாகத் தீயில் கருகியதாகவும் சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய அதிகாரி Clarice Jimoh தெரிவித்தார். இந்த தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாலை 3.39 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் Clarice Jimoh தெரிவித்தார். தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகச் சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய அதிகாரி Clarice Jimoh தெரிவித்தார்.


Sebuah rumah papan di Kampung Rampayan Laut musnah sepenuhnya dalam kebakaran awal pagi. Kenderaan di hadapan rumah turut hangus. Tiada kemalangan jiwa dilaporkan dan punca kebakaran masih disiasat oleh pakar forensik kebakaran Jabatan Bomba Sabah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *