காலியாக இருக்கும் 282 PPR மலிவு விலை வீடுகள்! – இப்போதே விண்ணப்பிக்கவும்!

top-news
FREE WEBSITE AD

ஜுலை 28,

அரசாங்கத்தின் மலிவு விலை வீடமைப்புத் திட்டமான PPR வீடுகளில் 282 வீடுகள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10 வரையில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் ரெம்பாவ் பகுதியில் உள்ள PPR வீடுகளில் சுமார் 282 வீடுகள் காலியாக இருப்பதாகவும் நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினர்  Arul Kumar Jambunathan  தெரிவித்தார். Chembong பகுதியில் 452 வீடுகள் கட்டுமானத்திலிருப்பதாகவும் இதுவரையில் 166 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டிருப்பதாகவும் நெகிரி செம்பிலான் உள்ளூர் மேம்பாட்டு வீட்டு வசதித் துறை ஆட்சிக் குழு உறுப்பினரான Arul Kumar Jambunathan விளக்கமளித்தார். 

அரசாங்கத்தின் மலிவு விலை வீடமைப்புத் திட்டமான PPR வீடுகளின் விலை RM 40,000 இலிருந்து தொடங்குவதாகவும் மாதாந்திரக் கட்டணம் RM250 ரிங்கிட் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும்  https://sprn.kpkt.gov.my வலைத்தலத்தின் வாயிலாக விண்ணப்பங்களை மேற்கொள்ளும்படியும் நெகிரி செம்பிலான் உள்ளூர் மேம்பாட்டு வீட்டு வசதித் துறை ஆட்சிக் குழு உறுப்பினரான Arul Kumar Jambunathan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *