தீயில் கருகி உயிரிழந்த இரு வெளிநாட்டினர்! – ஜொகூரில் பரிதாபம்!
- Thinagaren Sanggaren
- 28 Aug, 2025
ஆகஸ்ட் 28,
ஜொகூர் பொண்தியானில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று காலை 11 மணியளவில் ஜொகூர் பொண்தியானில் உள்ள Lorong Manggis குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த தீ விபத்து நிகழ்ந்திருப்பதாக பொண்தியான் மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார். தீயணைப்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்திய பின்னர் வீட்டிலிருந்து இருவரின் சடலத்தை மீட்டிருப்பதாக பொண்தியான் மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார்.
உயிரிழந்த இருவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 31 வயது Nasri E-Sa, 27 வயது Masabuding Sa-Laeh என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்களுடன் தங்கியிருந்த மேலும் மூவர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொண்தியான் மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார். உயிரிழந்த இருவரின் உடலையும் அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தீ ஏற்பட்டதற்கான காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் பொண்தியான் மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



