டிரம்ப் – மலேசியா ஒப்பந்தம் மகிழ்ச்சியடைய ஒன்றுமில்லை இது முட்டாள்தனமானது! - மகாதீர்
- Shan Siva
- 08 Aug, 2025
கோலாலம்பூர், ஆக் 8: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒப்பந்தத்தில் அரசாங்கம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிகிறது. இது முட்டாள்தனமானது என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மலேசியாவுக்கான
வரியை 25% லிருந்து 19% ஆகக்
குறைத்ததற்கு ஈடாக, மலேசியாவிற்குள் நுழையும்
11,000 அமெரிக்கப் பொருட்களின் மீதான அனைத்து வரியும்
ரத்துசெய்யப்படுகிறது.
மேலும் மலேசியா
அமெரிக்காவிற்கு அரிய வகை மண்ணை வழங்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இது மிகக்
குறைந்த பணத்தையே பெறுகிறது. இது பொருளின் மொத்த மதிப்பில் 5% மட்டுமே. ஆனால், மலேசியா அரிய
மண்ணைச் செயலாக்கி அதில் உள்ள தனிமங்களைப் பிரித்தெடுக்க வேண்டும், இதற்கான வருமானம் அரிய மண்ணை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும் என்று மகாதீர் தமது முகநூல் பதிவில்
குறிப்பிட்டுள்ளார்.
இதில் மலேசியா பல மடங்கு அதிகமாகப் பெற
முடியும் என்றாலும், வெறும் 5% மட்டுமே
ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமாக இருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் 11,000 பொருட்களைப்
பொறுத்தவரை, நமது வரியில் 100% ஐ ரத்து செய்கிறோம். இதற்காக அமெரிக்க வரியில்
6% மட்டுமே குறைப்பு கிடைக்கிறது. இது ஒரு நல்ல
ஒப்பந்தம் அல்ல என மகாதீர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



