டிரம்ப் முன்வைத்துள்ள திட்டம் அமைதிக்கானது அல்ல; அது ஓர் அச்சுறுத்தல் - மகாதிர் எச்சரிக்கை
- Shan Siva
- 03 Oct, 2025
கோலாலம்பூர், அக் 3 – பாலஸ்தீனத்தில் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 20 அம்ச திட்டத்தை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது, ஒரு அமைதிக்கான திட்டம் அல்ல, மாறாக அது ஓர் அச்சுறுத்தல் என்று விவரித்தார்.
அவரைப்
பொறுத்தவரை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வரைவு
செய்யப்பட்ட இந்த திட்டம், இஸ்ரேலால் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பதால், அது அவர்களின்
சொந்தத் தலைவர்களால் வரைவு செய்யப்பட்டது என்று மகாதிர் கூறினார்.
நான்கு
நாட்களுக்குள் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் இறுதி
எச்சரிக்கை விடுத்தார். இல்லையெனில் இனப்படுகொலை நிற்காது, மேலும்
மோசமாகிவிடும். எனவே, இது தெளிவாக ஒரு தீர்வு
அல்ல, அச்சுறுத்தல்தான் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில்
வலியுறுத்தினார்.
கடந்த
திங்கட்கிழமை, வெள்ளை மாளிகையில் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு
செய்தியாளர் கூட்டத்தில் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச அமைதித்
திட்டத்தை டிரம்ப் வழங்கினார்.
இந்தத்
திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்காக அனைத்து
ஹமாஸ் பணயக்கைதிகளையும் பரிமாறிக்கொள்வது, காசாவிலிருந்து
இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸை
நிராயுதபாணியாக்குதல் மற்றும் ஒரு சர்வதேச அமைப்பின் தலைமையில் ஒரு இடைக்கால
அரசாங்கத்தை உருவாக்குதல் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



