டிரம்பின் வருகை, நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா விவகாரங்களுக்கு பொறுப்பேற்று அன்வார் பதவி விலக வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 6-

டிரம்பின் வருகை, நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா ஆகிய விவகாரங்களுக்கு பொறுப்பேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சியினர், மக்கள் தலைநகரில் கூடியுள்ளனர். இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய ஹம்சா, நாட்டில் நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா இயற்றப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் மலேசியாவுக்கு வருகை தருவதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.ஆக இவ்விரு பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும்.மேம்பாட்டாளர்களின் நலன்களுக்காகப் பிரதமர் போராடக் கூடாது.மேலும் டொனால்ட் டிரம்பிற்கு நாட்டின் அழைப்பை அன்வார் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *