வியாழன் : 8 மே, 2025
10 : 59 : 49 PM
முக்கிய செய்தி

ஜெலன்ஸ்கியை எச்சரித்த ட்ரம்ப் - வெடித்த சர்ச்சை!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) இடையே போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு வார்த்தை பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பு கடுமையான வார்த்தை மோதல்களில் முடிந்து உள்ளது.
அதனையடுத்து பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும் வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ட்ரம்ப் கடுமையாக சாடினர், நீங்கள் இலட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்?நீங்கள் இந்த நாட்டை அவமதிக்கிறீர்கள்; 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது என ட்ரம்ப் கடும் கோபத்தில் பேசியுள்ளார்.

உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டனர். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் முடிந்திருக்கும்.ரஷ்யா உடன் போரில் உக்ரைன் வெல்லப்போவதில்லை. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் 3ம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது என நேரடியாக கடுமையாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *