குடிகார ஓட்டுநருக்கு RM 13,000 அபராதம்!
- Shan Siva
- 21 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 21: நேற்று இரவு கோலாலம்பூர், வங்சா மாஜுவில் உள்ள ஜாலான் கெந்திங் கிள்ளான்
போக்குவரத்து சந்திப்பில், சிகப்பு விளக்கை மீறிச்
சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய குடிகார ஓட்டுநருக்கு RM13,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கோலாலம்பூர் போக்குவரத்து
விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சம்சுரி இசா ஒரு அறிக்கையில், 42 வயதான அந்த ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட
மூச்சுப் பரிசோதனையில் அவர் மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கோலாலம்பூர்
போக்குவரத்து நீதிமன்றத்தில், 1987 ஆம் ஆண்டு சாலைப்
போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 45A(1)-இன் கீழ், குடிபோதையில் வாகனம்
ஓட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, அங்கு அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றம் அவருக்கு ஒரு
நாள் சிறைத்தண்டனையும், RM13,000 அபராதமும்
விதித்தது. அபராதம் செலுத்தத்
தவறினால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம்
வைத்திருக்கவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
1987 ஆம் ஆண்டு சாலைப்
போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருவதாக
ஜம்சூரி கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



