மலேசிய மாமன்னரை அழைத்த ரஷ்யாவின் விளாடிமிர் புடின்!
- Thinagaren Sanggaren
- 04 Aug, 2025
ஆகஸ்ட் 4,
மாட்சிமை தங்கிய மாமன்னர் Sultan Ibrahim இன்று ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்டார். ரஷ்யாவின் அதிபர் Vladimir Putin அழைப்பை ஏற்று மாமன்னர் இன்று காலை 8.55 மணிக்குச் சுபாங் ராணுவ விமானத்தில் பயணத்தை மேற்கொண்டார். Vladimir Putin அழைப்பிற்கு ஏற்ப மாமன்னரின் இந்த பயணம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
கடந்த 1967 மன்னராட்சியிலிருந்த சோவியத் யூனியனுடன் மலேசிய மலாய் ஆட்சியாளர்கள் கடல்வழி பங்குபரிவர்த்தனையைத் தொடங்கியதிலிருந்து இப்போது 2025 மலேசிய மாமன்னர் Sultan Ibrahim முதல் முறை ரஷ்யாவுக்குப் பயணிப்பதால் ஆசிய நாடுகளிடைய இந்த பயணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டுள்ளது. முதல் உலகப்போரின் போது ஜெர்மனியின் SMS EMDEN CRUISER ராணுவக் கப்பல் பினாங்கு துறைமுகத்தைத் தாக்க முற்பட்ட போது அப்போதைய மலாய் ஆட்சியாளர்களின் ராணுவத்தால் SMS EMDEN CRUISER ராணுவக் கப்பல் பினாங்கு துறைமுகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டதிலிருந்து மலேசியாவுக்கும் ரஷ்யாவுக்குமான அரசு தந்திர உறவு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



