கைகளால் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர்

top-news
FREE WEBSITE AD

மாஸ்கோ, மே 23-

இரு கால்களையும் இழந்த ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் Rustam Nabiev, கைகளின் உதவியுடன் மட்டுமே உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் மலையை ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை உலகம் முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

34 வயதான ருஸ்தாம் நபியேவ், 2015-ஆம் ஆண்டு ராணுவ முகாமில் ஏற்பட்ட கட்டிட இடிபாடில் சிக்கி தனது இரு கால்களையும் இழந்தார். இருப்பினும் மனம் தளராமல், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாழ்க்கையில் எதுவும் சாத்தியமே என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற இலக்குடன் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டார்.

நேபாள நேரப்படி மே 20-ஆம் தேதி காலை 8.16 மணியளவில், செயற்கைக் கால்கள் இல்லாமல் கைகளின் உதவியுடன் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் நபராக அவர் வரலாறு படைத்துள்ளார். இந்த தகவலை எவரெஸ்ட் முகாம் ஒருங்கிணைப்பாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *