ஸாரா கைரினா வழக்கில் உண்மையும் நீதியும் சட்டத்தின்படி நிலைநிறுத்தப்பட வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக22-

முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் சம்பந்தப்பட்ட வழக்கில் உண்மையும் நீதியும் சட்டத்தின்படி முழுமையாக நிலைநிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கான உண்மை மற்றும் நீதியை, சமூக ஊடகங்கள் அல்லது பொதுக் கருத்துகள் மூலம் தீர்மானிக்க முடியாது என்று உள்துறை அமைச்சர் டத்தோ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

"தொடர் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த நாம், எதைத் தேடுகிறோம்? உண்மையைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம்.நீதியை நிலைநாட்ட விரும்புகிறோம். அப்படியானால் வழிமுறை என்ன? அது சட்டத்திற்கு இணங்க இருக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட நோயியல் நிபுணர், ஸாரா கொலை செய்யப்பட்டார் என்ற கோட்பாட்டை உருவாக்கிய ஆசிரியர், சலவை இயந்திரத்தை பயன்படுத்தி சித்திரவதை செய்யப்பட்டார் என்று கூறியதை ஏற்றுக்கொள்வதன் மூலம் உண்மையை உருவாக்க முடியாது." என்றார் அவர்.

புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சு அளவில் நடைபெற்ற சுதந்திர தினம், மலேசியா தினக் கொண்டாட்டங்கள் மற்றும் 2025 ஆகஸ்ட் மாதத்திற்கான அவ்வமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு டத்தோ ஸ்ரீ சைஃபுடின் அவ்வாறு கூறினார்.ஸாராவின் மரணம் தொடர்பாக பல வதந்திகள் பரவி வருவதை தங்கள் தரப்பு அறிந்திருப்பதாகவும், மக்களவையில் தாம் விசாரணை அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட போதிலும், அவதூறுகளும் போலிச் செய்திகளும் தொடர்ந்து பரவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 'பள்ளி மாணவர் கும்பல்' எனும் பெயரில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுக்குப் பின்னணியில் முதன்மை நபர்களாக யாரேனும் செயல்படுகின்றனரா என்பதை அரச மலேசிய போலீஸ் படை ஆராய்ந்து வருகின்றது.12 வயது மாணவி சம்பந்தப்பட்ட வழக்கில்,துன்புறுத்தல் கூறுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பாலியல், பெண்கள் மற்றும் சிறார்கள் புலனாய்வு பிரிவு, டி11-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக சைஃபுடின் நகத்தியோன் கூறினார்.

"விசாரணை டி11-இன் கீழ் மேற்கொள்ளப்படுவதால் சிறார்களையும் உள்ளடக்கி இருக்கின்றது.எனவே, கண்டிப்பாக போலீஸ் கவனமாக செயல்பட வேண்டும்.இந்த மாணவியிடமிருந்து வாக்குமூலம் பெற விரும்பினால்,
அதனை பயன்படுத்த முடியாது. அங்கு எங்களுடைய மனநல மருத்துவ நிபுணர் ஒருவர் இருக்கின்றார். டி11 போலீசார் பல்வேறு நிபுணத்துவங்களைக் கொண்டுள்ளனர். எனவே. நாங்கள் சாதாரண வழக்குகளைக் கையாள்வது போல் இல்லை. ஏனென்றால். இது புதிய வழக்கு." என்றார். அவர்.

சிக்கல் நிறைந்த வழக்காக கருதப்படும் இதனை அதிகாரிகள் கவனமாக கையாள்வதோடு, எந்தவொரு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முன்னதாக விரிவான விசாரணை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *