பிரதமரின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்தும் சட்டம்: அன்வரின் துணிச்சலைப் பாராட்டிய அஸலினா

top-news
FREE WEBSITE AD

பாங்கி, மே 10-

பிரதமர் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தும் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்த முன்வந்துள்ள பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அவர்களின் நடவடிக்கை துணிச்சலான அரசியல் சீர்திருத்தமாகும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸலினா ஒத்மான் சைட் பாராட்டியுள்ளார்.

பாங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “தனது சொந்த அதிகார காலத்தையே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது சாதாரண விஷயம் அல்ல. பலர் இதைப் பற்றி பேசுவார்கள், ஆனால் நடைமுறைக்குக் கொண்டு வர தைரியம் மிகக் குறைந்த தலைவர்களுக்கே இருக்கும்,” என்றார்.

மேலும், “ஒரு பிரதமராக இருக்கும் ஒருவர் தன்னுடைய அதிகாரத்தை தானே கட்டுப்படுத்த விரும்புவாரா? அன்வார் இப்ராஹிம் அதற்கான துணிச்சலைக் காட்டியுள்ளார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம், நாட்டில் நிர்வாக சீர்திருத்தங்களையும் அதிகார சமநிலையையும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாக வரையறுக்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *