சைபர் குற்றச் சட்ட மசோதா – அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல்
- Tamil Malar (Reporter)
- 04 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 4-
1997 ஆம் ஆண்டு கணினி குற்றச் சட்டம் (சட்டம் 563) மாற்றாக, புதிய சைபர் குற்றச் சட்ட மசோதா (RUU Jenayah Siber) ஒன்றை அரசு இறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, ஆன்லைன் மோசடி உள்ளிட்ட சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய சட்டம் அவசியமாகியுள்ளது என கூறினார். கடந்த ஆண்டு மட்டும் இணைய மோசடிகளால் ஏற்பட்ட நிதி இழப்பு 2.9 பில்லியன் வரை சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இழப்பு 1.574 பில்லியன் ஆக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது சைபர் குற்றங்களால் ஏற்பட்ட இழப்பு 86 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
கிராமப்புற, புறநகர் வளர்ச்சி அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் அகமட் ஸாஹிட், புதிய சைபர் குற்றச் சட்டம் மூலம் தற்போதைய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமலாக்க அமைப்புகளின் திறன் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



