RXZ மோட்டார் சைக்கிள் ஊர்வலம்! 87 சம்மன்கள்! காவல்துறை நடவடிக்கை!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 15,

மலாக்காவில் 2 நாள்கள் நடைபெற்ற RXZ மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் நிகழ்ந்திருப்பதால் மலாக்கா மாநிலக் காவல்துறை நடவடிக்கை எடுக்கவிருப்பதாக மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். 2 நாள்கள் நடைபெற்ற இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு சில மோட்டர் சைக்கிள்கள் போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் மொத்தம் 87 சம்மன்கள் வெளியிடப்பட்டிருப்பதாக Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட RXZ Members Ride Edition 3.0 எனும் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்குக் காவல்துறை அனுமதி வழங்கியிருந்தாலும் பொதுநலன், சாலை போக்குவரத்து விதி மீறல்களின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar விளக்கமளித்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மோட்டார் சைக்கிள்கள் காலாவதியான ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் இல்லாதது, தகாத STICKERS, வாகனக் காப்பீடு இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, சமிஞ்சை விளக்குகளை மீறியது போன்ற போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மொத்தம் 87 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாக மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *