சபாவின் வளங்களை உறிஞ்சும் எண்ணம் எனக்கு இல்லை! பிரதமர் அன்வார்!
- Thinagaren Sanggaren
- 22 Oct, 2025
அக்தோபர் 22,
சபா சரவாக் மாநிலங்கள் மலேசியாவின் மாநிலங்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார். மலேசியாவில் அதிகமான கனிமவளங்களைக் கொண்டிருக்கும் மாநிலமாகச் சபா திகழ்கிறது. அதிகமான கனிமவளங்களை உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் சபா மாநிலம் திகழ்கிறது. இதனால் நாட்டின் ஆண்டு வருவாய் அதிகரிப்பதாகவும் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
சபா மாநிலத்தின் மூலமாக நாட்டிற்கு வளமான பொருளாதார வருவாயைப் பெறுவதால் சபாவின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் பங்களிப்புகள் இருக்க வேண்டும் என Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார். கடந்த 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சபாவிற்கு RM 10 BILLION நிதி அதன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது. தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு RM 17 BILLION என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். சபாவின் வளங்களை மட்டும் நாம் அனுபவிக்க கூடாது. அதன் மேம்பாட்டுக்கு மலேசியாவின் பங்களிப்பாக இந்த நிதி இருக்கும் என தாம் நம்புவதாக Datuk Seri Anwar Ibrahim இன்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



