சபா மாநிலச் சட்டமன்றத்தைக் கலைத்தார் முதலமைச்சர் HAJIJI! 60 நாள்களுக்குள் தேர்தல்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 6,

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவக்கும் வகையில் இன்று சபா மாநில ஆட்சி கலைக்கப்படுவதாகச் சபா மாநில் முதலமைச்சர் Hajiji Noor அறிவித்தார். இன்று நண்பகல் 3 மணிக்குச் சபா கோத்தா கினாபாலுவில் உள்ள அரசு மாளிகையில் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இந்த அறிவிப்பை Hajiji Noor அறிவித்தார். இன்று காலை சபா ஆளுநர் Musa Aman அவர்களைச் சந்தித்த Hajiji Noor சட்டமன்றக் கலைப்புக்கான ஒப்புதலைப் பெற்றதாகவும் 17 ஆவது சபா சட்டமன்றத் தேர்தல் குறித்தான அறிவிப்புகளைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றும் தெரிவித்தார். 

கடந்த 2020 செப்டம்பர் 26 நடைபெற்ற சபா சட்டமன்றத் தேர்தலில் GRS கூட்டணி வெற்றிப் பெற்று முதல் முறையாக சபாவில் ஆட்சி அமைத்தது. கடந்த சபா சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தானும் பாரிசானும் தனித் தனாகத் தேர்தலில் போட்டியிட்டு பக்காத்தான் 7 சட்டமன்றங்களையும் பாரிசான் 13 சட்டமன்றங்களிலும் வெற்றிப் பெற்றது. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் சபாவின் 17 ஆவது மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தானும் பாரிசானும் இணைந்து ஒற்றுமை கூட்டணியாகத் தேர்தலை எதிர்நோக்குவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *