ஆர்ய்னா சபலென்கா இரண்டாவது ஆண்டாக WTA ஆண்டின் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்

top-news

நியூயார்க், டிச. 16-

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆர்ய்னா சபலென்கா, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் டென்னிஸ் சங்கம் (WTA) ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டாவது ஆண்டு தொடர்ச்சியாக வென்றார். ஆண்டு முழுவதும் ரேங்கிங்கில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக WTA நேற்று அறிவித்தது.

2025 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா, யு.எஸ். ஓபன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டு முடித்தார். வெற்றிகள், பட்டங்களின் எண்ணிக்கையில் முன்னிலை வகித்த அவர், ஒன்பது இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியன் ஓபன், ரோலாண்ட் காரோஸ் போட்டிகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். விம்பிள்டனில் அரையிறுதி வரை சென்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *