2,559 வாகனங்களுக்குச் சம்மன்! போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து ஓட்டுநர் கைது!

top-news

ஜூன் 11,

விடுமுறை காலங்களில் கோலாலம்பூர் போக்குவரத்துத் துறையினர் மேற்கொண்ட சாலை போக்குவரத்து சோதனையில் 2,559 வாகனங்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் போதைப்பொருள் பயன்படுத்திய பயணிகள் விரைவுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் சாலை போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார். 30 வயதுடைய பேருந்து ஓட்டுநர் லுமூட்டிலிருந்து கெமாமான் நோக்கிச் செல்வதாகவும் Morfin வகை போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் Hamidi Adam தெரிவித்தார். 

நேற்று வரையில் சுமார் 33,988 வாகனங்களைச் சோதனையிட்டதாகவும் மொத்தம் ஒரு லாரி 2 சொகுசு கார்கள் உட்பட 26 வாகனங்களைப் பறிமுதல் செய்ததாகவும் கோலாலம்பூர் சாலை போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார். கடந்த 6 நாள்களில் போக்குவரத்து விதிகளை மீறிய 2,559 வாகனங்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மேலதிக விசாரணைகளும் சோதனைகளும் தொடர்ந்து நடத்தப்படுவதாகவும் கோலாலம்பூர் சாலை போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார்.


Dalam operasi trafik sempena cuti, 2,559 saman dikeluarkan di Kuala Lumpur. Seorang pemandu bas ekspres berusia 30 tahun ditahan kerana positif dadah jenis morfin ketika memandu dari Lumut ke Kemaman. Sebanyak 33,988 kenderaan diperiksa sepanjang enam hari operasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *