ஒரே வாரத்தில் 16,000 சம்மன்கள்! – POLIS KL!
- Thinagaren Sanggaren
- 07 Oct, 2025
அக்தோபர் 7,
தலைநகரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு எதிராகக் கடந்த 6 நாள்களில் மொத்தம் 16,000 சம்மன்களைக் கோலாலம்பூர் சாலை போக்குவரத்துத் துறை வழங்கியிருப்பதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Fadil Marsus இன்று தெரிவித்தார். கடந்த அக்தோபர் 1-இல் தொடங்கப்பட்ட இச்சோதனை நேற்று இரவு வரையில் கோலாலம்பூரின் முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்டதாக Datuk Fadil Marsus தெரிவித்தார்.
கார் ஓட்டுநர்களுக்கு 13,365 சம்மன்களும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு 2,813 சம்மன்களும் வணிக வாகனங்களுக்கு 200 சம்மன்களும் என 7 நாள்களில் 16,000 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாக Datuk Fadil Marsus தெரிவித்தார். தலைநகரில் ஏற்படும் பெரும்பாலான வாகன நெரிசல்களுக்குச் சாலை விதிகளை ஓட்டுநர்கள் முறையாகப் பின்பற்றாது என்பதால் கோலாலம்பூர் சாலை போக்குவரத்துப் பிரிவு Op P.U.U. எனும் சிறப்புச் சோதனையின் மூலமாகச் சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்களுக்குச் சம்மன் வழங்குவதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Fadil Marsus தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



