ராயா கொண்டாட்டத்தில் தங்கச் சங்கிலியைத் திருடிய பெண் கைது!

top-news

ஏப்ரல் 5,

ராயா கொண்டாட்டத்திற்காக நண்பரின் வீட்டுக்குச் சென்ற பெண் வீட்டிலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். தாவாவ் மாவட்டத்திலுள்ள Taman Pasadena குடியிருப்புப் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு ராயா கொண்டாட்டத்திற்காகச் சென்ற பெண் வீட்டை விட்டு வெளியேறியதும் தனது சங்கச் சங்கிலியைக் காணவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாக Tawau மாவட்டக் காவல் ஆணையர் Champin Piuh தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் வீட்டைச் சோதனையிட்டதாகவும் வீட்டுக்கு வந்தவர்களில் ஒருவரானப் பெண்ணின் வீட்டை நேற்று அதிகாலை சோதனையிட்டதில் காணாமல் போன தங்கச் சங்கிலி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் Tawau மாவட்டக் காவல் ஆணையர் Champin Piuh தெரிவித்தார். திருட்டில் ஈடுபட்ட உள்ளூர் பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் Tawau மாவட்டக் காவல் ஆணையர் Champin Piuh தெரிவித்தார்.

Seorang wanita ditahan polis kerana disyaki mencuri rantai emas ketika beraya di Taman Pasadena, Tawau. Mangsa menyedari kehilangan selepas suspek beredar. Polis menahan suspek di Kampung Hidayat

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *