சித்திரை 1 - தமிழர் வருட பிறப்பு - ஒரு அறிவியல் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

 வேளாண் சுழற்சியின் தொடக்கமே தமிழர்களின் வேலை தொடக்கம். எனவே அதுவே தமிழர்களின் ஆண்டு தொடக்கமாக இருக்க வேண்டும்.
சூரியன் வெளிவராத நாட்களே இல்லை என்கிற சூழல் உள்ள நம் போன்ற வெப்ப பிரதேசத்தில் சூரிய ஒளி மற்றும் அதன் நிழலின் நீளம், கோணம் ஆகியவை கொண்டே நாளின் நேரம், வருடத்தின் பருவம், மாதம் ஆகியவை முடிவு செய்யப்பட்டன.

Equinox என்கிற சம-பகல்-இரவு நாட்கள்:
அத்தகைய வானிலை மாற்றங்களில் மிக முக்கியமானது Equinox என்று சொல்லப்படுகிற சமபகலிரவு புள்ளி. சூரியன்   பூமியின் பூமத்திய ரேகைக்கு  செங்குத்தாக வரும் போது  பகல் நேரம் அதிகமாகி இரவு நேரம் படிப்படியாக குறையும். எனவே இந்த நாள் கார் காலத்தின் வீழ்ச்சியையும் கோடையின் தொடக்கத்தையும் குறிக்கும். இது இளவேனிற் கால சமபகலிரவு. இதுவே தமிழர்கள் தங்களை அடுத்த வேளாண் ஆண்டுக்கு தயார் செய்து கொள்ளும் துல்லியமான அடையாளம் ஆகும்.

கோடையின் தொடக்கத்தில் வரும் இந்த சமபகலிரவு, கோடையின் இறுதியிலும் அதாவது கார் காலத்தின் தொடக்கத்திலும் நேரெதிர் திசையில் வரும் (சரியாக ஆறு மாதம் கழித்து). ஆனால் வேளாண்மை முக்கியத்துவம் இல்லாத அந்த நாளை தமிழர்கள் முக்கியமாக கருதவில்லை.

Equinox ஈராயிம் ஆண்டுக்கு ஒருமுறை மாறும்:சில ஆயிரம் வருடங்கள் கடக்கையில் பூமியின் கோண மாற்றத்திற்கு ஏற்றார் போல மாறுபடும். தற்போது மார்ச் இறுதியில் மீன ராசி எனப்படும் மீன ஓரையில் வரும் 

ஆனால் கடைச் சங்க காலத்தில்  இந்த Equinox ஏப்ரல் பாதியிலேயே வந்தவிட்டது (மேஷ ராசி எனப்படும் மேழ ஓரையில்).
அதாவது சங்க காலத்தில் சித்திரை மாதம் தொடங்கும் போது தான் சூரியனின் கிரணங்கள் புவிநடு கோட்டிற்கு நேராக வந்தது. எனவே அதையே ஆண்டு தொடக்கமாக கொண்டனர். 

இதற்கான சான்று 

“திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து”
என்று தொடங்கும் நெடுநல்வாடை பாடல் கூறுகிறது.

இதில் "ஆடு" என்கிற ஓரை "மேழ ராசியை" குறிக்கும். எனவே தான் ஆண்டு தொடக்கமான மேழ ஒரையின் சித்திரை மாதத்தை முதல் மாதமாக கொண்டனர்.
இதற்கும் ஈராயிரம் ஆண்டுகள் முந்தைய காலத்தில் அது காளை ராசியின் போது வந்துள்ளது. இப்படியாக அந்த Equinox கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, 70 ஆண்டுகளுக்கு 1 பாகை என்கிற அளவில் தொடங்கிய அதே ராசிக்கு திரும்பி வருவதற்கு  ஏறக்குறைய 23,000 முதல் 25,200 ஆண்டுகள் வரை ஆகும். இதுவே புத்தாண்டின் அறிவியல் அடிப்படை.
இத்தனை நுட்பமாக வானியலை தமிழர்கள் அறிந்த காரணத்தால் தான், சங்க காலத்தில் சித்திரையில் புத்தாண்டு  கொண்டாடப்பட்டது.
அதன் தொடர்பாகவே அந்நாட்களில் உண்டான “பொன் ஏர்” பூட்டுதல் உட்பட வேளாண் ஆயத்த பணிகள் இன்றளவும் சடங்கு முறையாக செய்யப்படுகின்றன. உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த ஒப்பில்லாத நம் முன்னோர் இன்னொரு "கடும் உழைப்பு" காலத்திற்கு இந்த நாளில் தயாரான ஒரு உன்னத வரலாறு இது.

ஒருவேளை புத்தாண்டை மாற்ற விரும்பினால்:
நவீன கால கடிகாரங்கள் வராமல் போயிருந்தால் விவசாய குடிகளாகிய தமிழர்கள் தங்களது ஆண்டு தொடக்கத்தை மாற்றம் செய்ய விரும்பினால் இந்த நூற்றாண்டில் சூரியனுடன் Equniox (சமபகலிரவு) உண்டாகும் மார்ச் 20 என்ற நாளையே புத்தாண்டாக மாற்றி இருக்க வேண்டும். (அதாவது மேழ ராசியில் இருந்து மாறி, மீன ராசிக்கு புத்தாண்டு மாறி இருக்க வேண்டும்)
தொழிற்புரட்சி பெருகிய இந்த காலத்தில் நாம் மழையை மட்டுமே நம்பி இல்லாத காரணத்தால், நமது வேளாண்மை முறைகள் முற்றிலுமாக இந்த புத்தாண்டு கணக்கை நம்பியே இல்லை என்பதால் இந்த "சித்திரை 1" புத்தாண்டை மாற்றி அமைக்கும் அவசியம இல்லை ் . அதே நேரத்தில் நமது முன்னோர்களின் அறிவியல் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமான  சித்தரை முதல் நாள் முக்கியத்துவத்தை நம் சந்ததியர்களுக்கு உணர்த்த  தமிழ் புத்தாண்டை சித்திரையின் முதல் நாள் கொண்டாடுவது நம் முன்னோர்களை பெருமைப்படுத்துவதாகும்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2) கூற்று:-

தையில் தான் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடினார்களா என்ற கேள்விக்கு தரப்படும் முதல் சான்று பாரதிதாசனின் ஒரு கவிதை."நித்திரையில் இருக்கும் தமிழா, சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”-இதுதான் அந்த கவிதைஆனால் அதே பாரதிதாசன் திங்கள் பன்னிரண்டு என்கிற கவிதையில்," சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி ஒத்து வரும் தை மாசி பங்குனி எல்லாம்- இவை ஓராண்டின் பன்னிரண்டு திங்களின் பெயர் " - என்கிறார்.இந்த கவிதையை ஏன் அவர் சித்திரையிலிருந்து ஆரம்பிக்கிறார் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.இரண்டாவது சான்றாக வைக்கப்படுவது மறைமலை அடிகள் மற்றும் 400 புலவர்கள் சேர்ந்து தான் தையில் புத்தாண்டு என்று அறிவித்தனர் என்பது. இதையும் கொஞ்சம் அலசலாம்.1921 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழறிஞர்கள் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டதாக கூறுகின்றனர். 

:- லட்சுமி சுப்பிரமணியம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *