கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் குவிந்த குப்பைகள்! – DBKL வருத்தம்

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 25,

நேற்றிரவு தலைநகரில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது சாலைகளில் குவிந்த குப்பைகளின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் வருத்தம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டங்களின் போது பொது இடங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியது. 

நேற்றிரவு தலைநகரின் முக்கிய சாலைகளில் கூட்டம் கூடியதிலிருந்து அதிகாலை 4 மணி வரையிலும் குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியாளர்கள் சிரமத்திற்குள்ளானதாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணி வரையும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றியதாகவும் இதனால் தலைநகரின் முக்கிய சாலைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் DBKL தெரிவித்துள்ளது. சாலையோரங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தும் சாலைகளின் ஓரத்திலும் நடை பாதையிலும் குப்பைகளைப் போடுவது பண்பற்ற செயல் என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும் என கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *