நீதிமன்றத்தில் கூச்சலிட்ட தொழிலதிபர்! அமைதியாக ஆஜரான சம்சூல்! தொடங்கியது RM629,000 ஊழல் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 29,

இன்று காலை ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் Albert Tei நீதிமன்றத்தில் கூச்சலிட்டபடியே அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டார். அவருடன் பிரதமர் அன்வாரின் முன்னாள் தலைமை அரசியல் செயலாளர் Datuk Seri Shamsul Iskandar, Putrajaya MAJISTRET நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். கனிமவள ஊழல் தொடர்பான விசாரணையில் பிரதமரின் அரசியல் செயலாளராக இருந்த போது Datuk Seri Shamsul Iskandar சட்டவிரோதமாக RM629,000 லஞ்சம் பெற்றார் என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

அதே வழக்கில் லஞ்சம் கொடுத்ததாகப் பிரபல தொழிலதிபர் Albert Teiயும் அவரின் உதவியாளர் என நம்பப்படும் Sofia Rini எனும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.இன்று Putrajaya MAJISTRET நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட Albert Tei உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிராக நான் செயல்பட்டதால் என் மீது இப்படியான தாக்குதல்கள் நிகழ்த்தியிருப்பதாகக் கூச்சலிட்டார். நீதிமன்றத்தில் கூச்சலிட அனுமதியில்லாததால், அதிகாரிகள் அவரை இழுத்துச் சென்ற காணொலி சமூகவலைத்தலங்களில் பரவி வருகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *