சம்சூரி அடுத்த PN தலைவரா? பாஸ் துணைத் தலைவர் மறுப்பு

top-news
FREE WEBSITE AD

கோத்தா பாரு, ஜன 6: பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைவர் பதவியை பாஸ் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அக்மத் சம்சூரி மொக்தார் ஏற்க உள்ளார் என்ற ஊகங்களை பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மறுத்துள்ளார்.  இது வெறும் வதந்தி மட்டுமே என அவர் தெரிவித்தார்.

PN-க்கு புதிய தலைவர் யார் என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக PN உச்ச மன்றக் கூட்டமும் இதுவரை நடைபெறவில்லை என்று குறிப்பிட்ட  அவர் இது வெறும் வதந்திதான் என்றார்.

PN தலைமையிலான எந்த முடிவும், கூட்டணிக்குள் அதிகாரப்பூர்வ ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே எடுக்கப்படும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பெரிக்காத்தான் முன்னாள் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் மற்றும் ‘டாக்டர் சாம்’ என ஆதரவாளர்களால் அழைக்கப்படும் அக்மத் சம்சூரி ஆகியோருக்கிடையேயான சந்திப்பைக் காட்டும் சமூக வலைதளப் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார். அந்தப் பதிவு, சம்சூரி PN-ன் அடுத்த தலைவராக உருவெடுக்கலாம் என்ற வதந்தியைப் பரப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *