அடகுக் கடையில் கொள்ளையிட்ட தம்பதி கைது!
- Thinagaren Sanggaren
- 30 Oct, 2025
அக்தோபர் 30,
கிளாந்தானில் உள்ள அடகுக் கடையில் கொள்ளையிட்ட தம்பதியரைக் காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தம்பதியர் இருவரும் இன்று Pasir Mas Majistret நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு ஜாமின் கோரிக்கை விடுத்ததும் ஜாமின் மனுவை ரத்து செய்து காவல்துறையினர் விசாரணைக்குக் கைது செய்யப்பட்ட இருவரும் ஒத்துழைக்கும்படி Majistret நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த அக்தோபர் 21 கிளாந்தான் பாசீர் மாஸ் அடகுக் கடையில் சுமார் RM5,7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த இருவரும் மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் காதலர் என்றும் ஆடவர் 49 வயது பெண் 47 உள்ளூர்வாசிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அடகுக் கடை நிறுவனர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தம்பதியர் இருவரும் கடந்த 17 ஆண்டுகளாகப் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டிருப்பதைக் காவல்துறையினர் கண்டறிந்திருப்பதால் இருவரையும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அடுத்த நீதிமன்ற விசாரணை நவம்பர் 6 மேற்கொள்ளப்படும் என Pasir Mas Majistret நீதிமன்றம் உத்தரவிட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



