வாகனம் நிறுத்துமிடத்தில் பாலியல் பலாத்காரம்! இருவர் கைது!
- Thinagaren Sanggaren
- 28 Jan, 2026
ஜனவரி 28,
கிள்ளானில் வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கொள்ளையடித்த இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த ஜனவரி 28 நள்ளிரவு 2 மணிக்கு வாகனத்தை நிறுத்திய 37 வயது பெண்ணிடம் காவல் அதிகாரிகள் என அடையாளப்படுத்திய இரு கொள்ளையர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 32 வயது 30 வயதுள்ள இருவரும் உள்ளூர் ஆடவர்களும் இன்று கோலாலம்பூர் SESYEN நீதிமன்றத்தில் குற்றமற்றவர்கள் என வாதிட்டு மேல்விசாரணையும் ஜாமின் கோரினர். வழக்கை விசாரித்த நீதிபதி முதல் நபருக்கு RM 20,000 ரிங்கிட் ஜாமினும் மற்றொருவருக்கு RM 10,000 ஜாமினும் வழங்கியதுடன் மேலதிக விசாரணைகளையும் சாட்சியங்களையும் சமர்பிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த நீதிமன்ற விசாரணை மார்ச் 5 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



