வழிப்பறியில் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் படுகாயம்! திருடன் கைது!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 19,

USM பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் Tan Sri Dzulkifli Abdul Razak வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து  வழிப்பறியில் ஈடுபட்ட 52 வயது ஆடவரைக் காவல்துறை கைது செய்திருப்பதாகப் பினாங்கு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Azizee Ismail இன்று தெரிவித்தார். கடந்த வெள்ளிக் கிழமை அதிகாலை தொழுமையை முடித்து Sungai Dua மசூதியிலிருந்து வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்த அவரை ஆடவர் ஒருவர் துப்பாக்கியின் பின் பகுதியைக் கொண்டு தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகப் பினாங்கு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Azizee Ismail தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட முன்னாள் துணை வேந்தர் மருத்துவமனை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது நலமாக இருப்பதாக USM பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை ஒன்றில் விளக்கமளித்துள்ளது. பாதிக்கப்பட்ட முன்னாள் துணை வேந்தரின் தலையில் 15 தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 52 வயது ஆடவர் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகப் பினாங்கு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Azizee Ismail தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *