பெர்சத்து துரோகிகளை அடையாளம் கண்டு நீக்க வேண்டும்! - SRI SANJEEVAN!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 30

பெர்சத்துக் கட்சியின் தலைவர் Tan Sri Muhyiddin Yassin-க்கு எதிராக துரோக உணர்வுடன் செயல்படும் ஒரு சில பெர்சத்து உறுப்பினர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெர்சத்து கட்சியின் ஆதரவுக் குழு துணைத் தலைவர் டத்தோ SRI SANJEEVAN வலியுறுத்தினார். பெர்சத்துக் கட்சியுடன் தொடர்பில்லாதவர்களும் பெர்சத்துக் கட்சிக்கு எதிராகச் செயல்படுவதை நாம் ஒன்றிணைந்து தடுக்க வேண்டுமென SRI SANJEEVAN கேட்டுக்கொண்டார்.

பெர்சத்து எனும் பூங்காவில் இருக்கும் முட்களை அடையாளம் கண்டு அதனை நீக்க வேண்டும். கட்சியின் உள்ளேயே இருந்து கொண்டு Tan Sri Muhyiddin Yassin தலைமைக்கு எதிராகச் செயல்படும் அரசியல் துரோகிகளை விரைந்து அடையாளம் காண பெர்சத்து தலைமைக்கு SRI SANJEEVAN அழைப்பு விடுத்தார். தனிநபர் சுயநலத்திற்காக அரசியலுக்குள் வந்த இதுமாதிரியான துரோகிகளால் பெர்சத்துவின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் இவர்கள் Tan Sri Muhyiddin Yassin முதுகில் குத்தும் முன்னமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெர்சத்து கட்சியின் ஆதரவுக் குழு துணைத் தலைவர் டத்தோ SRI SANJEEVAN வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *