கெடாவில் இந்தியர்கள் வளமாக வாழ்கிறார்கள்! சனூசி அறைகூவல்!
- Thinagaren Sanggaren
- 05 Nov, 2025
நவம்பர் 5,
இந்தியர்கள் கெடாவில் வளமாக வாழ்வதைக் கெடா மாநில அரசு உறுதிப்படுத்தும் என கெடா மெந்திரி பெசார் சனூசி நோர் தெரிவித்தார். சுங்கைப்பெட்டாணியில் உள்ள சுவர்ணபூமி மண்டபத்தில் நடைபெற்ற கெடா மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெடாவில் உள்ள 18 தமிழ்ப்பள்ளிகளுக்கும் கெடா மாநில அரசின் 1 லட்சம் நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கெடாவில் இயங்கும் 5 ஆதரவற்றோர் இல்லத்திற்கு 5,000 ரிங்கிட் நிதியுதவியும் வழங்கப்பட்டிருப்பதாகச் சனூசி தெரிவித்தார்.
கெடா மாநில அரசு நிதியிலிருந்து 1200 தீபாவளி உணவுக் கூடைகள் வழங்கப்பட்டதாகவும் அதற்கும் கெடா மாநில அரசில் 120,000 ரிங்கிட் நிதி பயன்படுத்தப்பட்டதகவும் சனூசி தெரிவித்தார். கெடா மாநிலத்தில் அனைத்து சமூக மக்களும் எந்தவொரு பாகுபாடும் இல்லாது வாழ்வதாகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பங்கை மக்கள் வழங்க வேண்டும் என்றும் சனுசி கேட்டுக்கொண்டார். கெடாவில் இந்தியர்கள் நிம்மதியாக வாழ்வதை மாநில அரசு உறுதிப்படுத்தும். இப்போது வளமாக வாழும் இந்தியர்கள் இனியும் வளமாக வாழ்வார்கள் என கெடா மெந்திரி பெசார் சனூசி நோர் தெரிவித்தார்,
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



