SARA உதவி தொகை - திருமணமாகதவர்களுக்கு இன்று முதல் பட்டுவாடா

top-news

கோலாலம்பூர், ஜன. 16-

உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளின் மத்தியில், குறைந்த வருமானம் கொண்ட திருமணமாகாத நபர்களுக்கு நிவாரணமாக (SARA) திட்டத்தின் கீழ் உதவிதொகை  இன்று முதல் வழங்கப்படுகிறது. இந்த மனிதநேய முயற்சி, நாடு முழுவதும் சுமார் 3.1 மில்லியன் பயனாளர்களுக்கு நேரடி பலன்களை அளிக்கிறது.

நிதியமைச்சு வெளியிட்ட தகவலின்படி, தகுதி பெறும் திருமணமாகாத நபர்கள் தங்களின் வருமான நிலைக்கு ஏற்ப மாதத்திற்கு அதிகபட்சம் 100 வெள்ளி வரை உதவித்தொகை பெறுவார்கள். இந்த தொகை, தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்கள், கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க பயன்படுத்த முடியும் என்பதால், அன்றாட செலவுகளில் நேரடி உதவியாக அமைகிறது.

21 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களாகவும், மாத வருமானம் 2,500 வெள்ளி அல்லது அதற்கு குறைவாகவும் உள்ளவர்கள் இந்த உதவிக்கு தகுதி பெறுகின்றனர். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் இந்த உதவி, குறைந்த வருமானம் கொண்ட திருமணமாகாத நபர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் நிம்மதியும் அளிக்கும் ஒரு முக்கியமான அரசாங்க முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *