திங்கட்கிழமை முதல் MyKad மூலம் 100 வெள்ளி உதவித் தொகை

top-news

கோலாலம்பூர், பிப்.6-

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad மூலம் ஒருமுறை 100 வெள்ளி உதவி வழங்கும் “SARA Untuk Semua” திட்டத்தின் பணப்பரிமாற்றம் இந்த திங்கட்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் II டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறுகையில், தகுதி சரிபார்ப்பை sara.gov.my இணையதளத்தில் சென்று மேற்கொள்ளலாம் என்றார். இந்த திட்டத்தின் மூலம், எந்த விண்ணப்பமும் செய்யாமல் அனைத்து குடிமக்களுக்கும் உதவி கிடைக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த திட்டத்திற்காக மொத்தம் 2.2 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உதவி தொகை பெறுநர்களின் MyKad-க்கு தானாகவே கிரெடிட் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“எந்த விண்ணப்பமும் தேவையில்லை. உதவி தொகை ஒவ்வொருவரின் MyKad-க்கும் தானாகவே செலுத்தப்படும். மேலும் இந்த உதவி 31 டிசம்பர் 2026 வரை செல்லுபடியாகும்,” என அவர் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தில் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *