ஒரு மில்லியன் மலிவு விலை வீடுகள்: அரசு இலக்கு

top-news

கோலாலம்பூர், டிச. 18-

மலேசிய அரசு, ஒவ்வொரு குடிமகனும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்ற இலக்கை விரைவுபடுத்தும் வகையில், 13ஆவது மலேசியத் திட்டம் (RMK13) இல் 2026 முதல் 2035 வரை ஒரு மில்லியன் மலிவு விலை வீடுகளை வழங்குவதை இலக்காக நிர்ணயித்துள்ளது.

BIMB செக்யூரிட்டீஸின் ரியல் எஸ்டேட் துறை அறிக்கையின்படி, இந்தத் திட்டம் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் வீடு வாங்குவதை அதிகரிக்கும் முயற்சியை குறிக்கிறது. இது நாட்டின் வீட்டு உரிமை விகிதத்தை உயர்த்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, நிலையான வருமானம் இல்லாத கிக் இகானமி தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் போன்றோருக்கு அரசு உதவி வழங்குகிறது. ஸ்கிம் ஜமினான் கிரெடிட் பெருமாஹான் (SJKP) இன் கீழ் RM10 பில்லியன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி உத்தரவாதம் சுமார் 20,000 கடன் வாங்குபவர்களுக்கு உதவும். முறையான வருமான ஆவணங்கள் இல்லாதவர்களும் வீட்டுக் கடன் பெற இது வழிவகுக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *