குள்ள குலா? பாப்பாராய்டு & கணபதிராவுக்கு அடுத்து அவரின் மனைவியா? அல்லது அவரின்....... ! - கீழ்தரமாகச் சாடிய உரிமை கட்சியின் சதீஸ்!
- Thinagaren Sanggaren
- 25 Nov, 2025
நவம்பர் 25,
டி.ஏ.பி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் துணை அமைச்சராகவும் இருக்கும் M.Kulasegaran-ஐ குள்ளன் என்றும் குள்ளமாக இருப்பவர் என்றும் உரிமை கட்சியின் சதீஸ் முனியாண்டி உருவக் கேலி செய்த காணொலி சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது. எதிர்வரும் 30 நவம்பர் உரிமை கட்சியின் 2 ஆவது பேராளர் மாநாடு ஷா அலாமில் நடைபெறும் நிலையில் அதற்கான பரப்புரைக் காணொலியை உரிமைக் கட்சி வெளியிட்டுள்ளது. அப்படியான காணொலியில் டி.ஏ.பியிலிருந்து விலகி உரிமைக் கட்சியில் இணைந்த பாகான் டாலாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Satees Muniandy தற்போது துணை அமைச்சராக இருக்கும் M.Kulasegaran மலேசியத் தமிழர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னமே மலேசியாவுக்கு வந்ததாகப் பொய்யானத் தகவல்களைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டு குள்ள குலா என உருவக் கேலியும் செய்துள்ளார்.
Satees Muniandyயின் காணொலியில் துணை அமைச்சராகவும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான M.Kulasegaran மட்டுமின்றி தற்போது கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கணபதி ராவ் அவர்களையும் அவருடைய சகோதரரான பாப்பாராய்டுவையும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். Satees Muniandy பினாங்கு மாநிலத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது RM 10 ரிங்கிட்டுக்கு மலிவு விலையிலான வீடுகளை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும் அப்போது சிலாங்கூரில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ‘பினாங்கில் இப்படி மலிவு விலையிலான திட்டத்தை அமல்படுத்தினால் சிலாங்கூரில் உள்ளவர்கள் என்னை பிய்த்து விடுவார்கள்’ என தெரிவித்ததாகச் சதீஷ் முனியாண்டி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, கணபதி ராவ்வும் அவரின் தம்பி பாப்பாராய்டுவும் டி.ஏ.பிக்கு அடிமையாக இருப்பதாகவும் காரணம் கணபதி ராவ் நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டார், அவருடைய தம்பி சட்டமன்ற உறுப்பினராகவும் ஆட்சிக் குழு உறுப்பினராகிவிட்டார். அடுத்தது அவருடைய தம்பியின் பொண்டாட்டிக்கு, அல்லது அவரின் தம்பியின் வேறொருவரா என தனி நபர் சாடல் மிகுந்த கருத்துகளைச் சதீஸ் முனியாண்டி பேசியிருக்கும்படியானக் காணொலி தற்போது சமூகவலைத்தலங்களில் பரவி வருகிறது.
முழுமையானக் காணொலி நண்பகல் 3 மணிக்கு MALAR TV YOUTUBE-இல் இடம்பெறும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



