சரவாக்கில் ரேபிஸ் நோயால் 10 வயது சிறுவன் உயிரிழப்பு
- Surendran Sumdraraj
- 21 Mar, 2026
கூச்சிங், மார்ச் 21-
சரவாக்கில் (ரேபிஸ்) நோயால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 10 வயதுடைய சிறுவன் சமீபத்திய பலியாக உள்ளார்.
கூச்சிங்கை சேர்ந்த அந்த சிறுவன், கடந்த மார்ச் 18ஆம் தேதி சரவாக் பொது மருத்துவமனையில் (HUS) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அந்த சிறுவன் பிப்ரவரி 11ஆம் தேதி ஒரு தெருநாயால் கடிக்கப்பட்டார். ஆனால் அவர் காயத்தை சுத்தம் செய்ததைத்தவிர மேலதிக மருத்துவ சிகிச்சை பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 11ஆம் தேதி முதல் அவருக்கு உணவு விருப்பமின்மை, வாந்தி மற்றும் நீரைக் கண்டு பயப்படும் ‘ஹைட்ரோபோபியா’ போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளன. பின்னர் மார்ச் 13ஆம் தேதி ஒரு கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அதே நாளில் சரவாக் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ரேபிஸ் நோய் ஒரு உயிருக்கு ஆபத்தான நோயாக இருப்பதால், விலங்குகளால் கடிக்கப்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



