Syed Saddiq முழுமையாக விடுதலை
- Surendran Sumdraraj
- 13 Jul, 2026
புத்ராஜெயா, ஜூலை 13-
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq Syed Abdul Rahman, தன்னை முழுமையாக விடுதலை செய்த கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பை, நாட்டின் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டும் முடிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக எதிர்கொண்ட வழக்குப் பயணம், தன்னை மட்டுமின்றி தனது பெற்றோர், குடும்பம், நண்பர்கள் மற்றும் அரசியல் வாழ்க்கையையும் பாதித்ததாக அவர் தெரிவித்தார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த விவகாரம் தொடங்கியதை நினைவுகூர்ந்த Syed Saddiq, ஆரம்பத்திலிருந்தே தாம் பயப்படவில்லை என்றும், குறுக்கு வழியை நாடவில்லை என்றும் கூறினார்.
விசாரணை நிலையிலேயே இருந்தபோதும், தமக்கு சிறப்பு சலுகை கோரவில்லை என்றும், தாம் உண்மையின் பக்கம் இருப்பதை நன்கு அறிந்திருந்ததாகவும் அவர் கூறினார்.
“நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ‘உண்மைக்காக துணிவுடன் நிற்பது’ என்ற கொள்கையை நான் பிடித்துக்கொண்டேன். அந்த நம்பிக்கையே இன்று எங்களை இங்கு கொண்டு வந்துள்ளது,” என அவர் தெரிவித்தார்.
ஆறு ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம் என்றும், அது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் பயணத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
இத்தீர்ப்பு, நீதித்துறை சுதந்திரம் மற்றும் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது என Syed Saddiq குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



