பன்றிகளுக்கான ஹாலால் சான்றிதழ் விவகாரம், போலி செய்திகளை நம்பாதீர்- தெரேசா கோக்
- Tamil Malar (Reporter)
- 15 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 15-
‘பன்றிக்கான ஹாலால் சான்றிதழ் வழங்குவது நியாயமானது’ என கூறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலை தெரேசா கோக் கடுமையாக மறுத்துள்ளார். அக்கூற்று முழுக்க முழுக்க பொய்யானது என்றும், தம்மை அவதூறாக சித்தரிக்கும் முயற்சியாகவே இது பரப்பப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
தமது சமூக ஊடகப் பதிவில், “என்னை மீண்டும் அவதூறுக்கு உள்ளாக்கியுள்ளனர். தயவு செய்து இந்தப் படத்தைப் பகிர்ந்து, போலி செய்திகளை நிராகரியுங்கள். நான் இதுபோன்ற எந்தக் கருத்தையும் ஒருபோதும் தெரிவித்ததில்லை,” என அவர் தெரிவித்தார். மேலும், தமது முகப்புப் படத்துடன் ‘பன்றிக்கான ஹாலால் சான்றிதழ் வழங்குவது சரியானது – தெரேசா கோக்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு போலி செய்தி காட்சியையும் அவர் பகிர்ந்தார்.
டிஏபி கட்சியைச் சேர்ந்த செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினரான தெரேசா கோக், இத்தகைய போலி செய்திகள் சமூக ஒற்றுமையை பாதிக்கக்கூடும் என்றும், மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



