உலகக் கோப்பையில் புதிய வரலாறு படைத்த ரொனால்டோ; உஸ்பெகிஸ்தானை 5-0 என நொறுக்கிய போர்ச்சுகல்

top-news
FREE WEBSITE AD

ஹூஸ்டன், ஜூன் 24 –

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆறு உலகக் கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையைப் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார்.

2026 உலகக் கோப்பை ‘குரூப் கே’ பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி உஸ்பெகிஸ்தானை 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது. இந்தப் போட்டியில் 41 வயதான ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

முன்னதாக டிஆர் காங்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடிக்கத் தவறிய ரொனால்டோ கடுமையான விமர்சனங்களைச் சந்தித்திருந்தார். ஆனால் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது தரத்தை மீண்டும் நிரூபித்தார்.

போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல், தாக்குதல் ஆட்டத்தின் மூலம் உஸ்பெகிஸ்தான் தற்காப்பை தொடர்ந்து சோதனைக்குட்படுத்தியது. ரொனால்டோவின் இரட்டை கோல்களுடன், மற்ற வீரர்களும் கோல் வேட்டையில் இணைந்ததால் போர்ச்சுகல் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *