3ஆர் விவகாரங்களில் சமரசம் இல்லை: பஹாங் இளவரசர் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

பகாங், மே 8-

பகாங் மாநிலத்தில் இன, மத மற்றும் அரச குடும்பத்தை (3R) தொடர்புபடுத்தி சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் எந்த முயற்சிக்கும் இடமில்லை என்று பகாங் இளவரசர் தெங்கு ஹஸ்ஸானல் இப்ராஹிம் ஆலாம் ஷா கடுமையாக எச்சரித்துள்ளார்.

குவாந்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் வெறுப்பை தூண்டும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வலியுறுத்தினார்.

“3ஆர் தொடர்பான பிரச்சினைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எந்த பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அனைவரும் தங்களது செயல்களில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மரியாதை, சகிப்புத்தன்மை மற்றும் சட்டத்தை உயர்வாக மதிக்க வேண்டும்,” என அவர் கூறினார்.

மேலும், அரசாங்க நிலம் அல்லது தனியார் நிலத்தில் வழிபாட்டு தலங்கள் கட்டுவது தொடர்பான எந்த நடவடிக்கையும் நாட்டின் சட்டங்களையும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *