வெற்றி கோலை முன்கூட்டியே கனவு கண்டேன் – லவுடாரோ மார்டினஸ்

top-news
FREE WEBSITE AD

அட்லாண்டா, ஜூலை 16-


இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் வெற்றி கோல் அடிப்பதைத் தாம் முன்கூட்டியே கனவு கண்டதாக அர்ஜென்டினா வீரர் லவுடாரோ மார்டினஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தின் 85-ஆவது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி வழங்கிய பந்தைப் பயன்படுத்தி என்சோ பெர்னாண்டஸ் சமநிலை கோல் அடித்தார். தொடர்ந்து 92-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அனுப்பிய துல்லியமான பந்தை லவுடாரோ மார்டினஸ் தலையால் முட்டி வெற்றி கோலாக மாற்றினார். இதன் மூலம் அர்ஜென்டினா 2–1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

“இந்தக் கோலை அடிப்பேன் என்று கனவு கண்டேன். நான் களமிறங்கி கோல் அடிப்பேன் என்று அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் மற்றும் பகுண்டோ மெடினாவிடம் முன்பே கூறியிருந்தேன். இறுதியில் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நெருக்கடியான தருணங்களில் எங்கள் அணி தனது மனவலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது,” என்று மார்டினஸ் கூறினார்.

இதன்மூலம் அர்ஜென்டினா ஏழாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. எட்டு முறை இறுதிப்போட்டியில் விளையாடிய ஜெர்மனிக்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா இரண்டாவது இடத்தில் உள்ளது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *