அனுவார் மூசா பாஸ் கட்சியில் தொடர முடிவு
- Surendran Sumdraraj
- 09 Mar, 2026
கோலாசிலாங்கூர், மார்ச் 9-
முன்னாள் அம்னோ பொதுச் செயலாளர் தான் ஸ்ரீ அனுவார் மூசா, அம்னோவில் மீண்டும் இணைய வந்த அழைப்பை நிராகரித்து, பாஸ் கட்சியுடன் தொடரும் தனது நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட அனுவார் மூசா, சமீபத்தில் சிலர் தன்னை தொடர்பு கொண்டு மீண்டும் UMNO-வில் இணையுமாறு அழைத்ததாகக் கூறினார்.
அவரது சில நெருங்கிய நண்பர்கள் ஏற்கனவே கட்சிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாகவும், தாமும் அவர்களுடன் சேர்ந்து அணியை வலுப்படுத்த வேண்டும் என அழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“எனது நண்பர்கள் இரண்டு மூன்று பேர் மீண்டும் ‘திரும்ப’ முடிவு செய்துள்ளனர். அவர்கள் என்னையும் அணியை முழுமையாக்க சேருமாறு அழைத்தனர்,” என்று அவர் கூறினார்.
ஆனால் அந்த அழைப்பை மரியாதையுடனும் அமைதியான மனதுடனும் நிராகரித்ததாக அனுவார் மூசா தெரிவித்தார். UMNO தன்னை நினைத்து அழைத்ததற்கு நன்றி தெரிவித்தாலும், தாம் தற்போது PAS கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



