Touch 'n Go மோசடியில் RM140,000 இழந்த இளம்பெண்! – காவல்துறை விசாரணை!
- Thinagaren Sanggaren
- 16 Jul, 2025
ஜூலை 16,
பணமோசடிக் குற்றச்சாட்டுகளில் சம்மந்தப்பட்டிருப்பதாகப் பெற்ற போலி அழைப்பை நம்பிய இளம்பெண் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க RM140,000 செலுத்தியதாக நம்பப்படுகிறது. சம்மந்தப்பட்ட இளம்பெணுக்குக் கடந்த ஜூலை 1, பணமோசடியில் ஈடுபட்டிருப்பதாக 3 ஆடவர்களிடமிருந்து அழைப்பைப் பெற்றதாகவும் அழைப்பில் பேசியவர்கள் தங்களைக் காவல்துறை அதிகாரி என்றும் Touch 'n Go நிறுவனத்தின் தலைமை அதிகாரி என்றும் அடையாளப்படுத்தியதால் அந்த அழைப்பை நம்பியதாகப் பாதிக்கப்பட்ட 18 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததார்.
கைது செய்யப்படுவோமா என பயத்தில் Jertih நகரில் உள்ள ஒரு வணிகத்தலத்தில் ஒரு பெண்ணிடம் நகைகளைக் கொடுத்ததாகவும் சோதனைக்குப் பின்னர் மீண்டும் அவர்கள் நகைகளைத் திருப்பிக் கொடுத்த்திடுவதாக உறுதியளித்ததாகவும் அதன் பின்னர் மீண்டும் நகையை மீட்க RM28,000 ஜாமின் செலுத்த வேண்டும் என மிரட்டப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக BESUT மாவட்டக் காவல் ஆணையர் Md Sani Md Salleh தெரிவித்தார். வணிகத்தலத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நகையைப் பெற்றதாக நம்பப்படும் 37 வயது பெண்ணைக் காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்ததாக BESUT மாவட்டக் காவல் ஆணையர் Md Sani Md Salleh தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



