போலி தொலைப்பேசி அழைப்பை நம்பி RM158,000 இழந்த முதியவர்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 21,

காவல்துறை ஆணையர் என காட்டிக் கொள்ளும் மோசடிக் கும்பலின் தொலைப்பேசி அழைப்பை நம்பி ஈப்போவைச் சேர்ந்த 73 வயது முதியவர் தனது சேமிப்புப் பணமான RM158,000 பணத்தை இழந்துள்ளார். பாதிக்கப்பட்ட முதியவர் நேற்றிரவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் மோசடியில் ஈடுபட்ட கும்பலைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் ACP Abang Zainal Abidin Abang Ahmad தெரிவித்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் காவல்துறையினர் தொலைப்பேசியின் மூலமாக எந்தவொரு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடம் பேசமாட்டார்கள் என்றும் அப்படியே காவல் நிலையத்திலிருந்து பொதுமக்கள் தொலைப்பேசி அழைப்பைப் பெற்றால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் ஈப்போ மாவட்டக் காவல் ஆணையர் ACP Abang Zainal Abidin Abang Ahmad வலியுறுத்தினார்.

சம்மந்தப்பட்ட முதியவருக்கு கடந்த மாதம் பணமோசடியில் சம்மந்தப்பட்டிருப்பதால் விசாரணைக்காக அவரின் வங்கியில் இருக்கும் பணத்தை முடக்கப்படுவதாக மோசடிக் கும்பல் மிரட்டியதாகவும் மிரட்டலுக்குப் பயந்து 73 முதியவர் 12 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குத் தனது சேமிப்புப் பணத்தைப் பரிவர்த்தனை செய்தததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பணத்தைச் செலுத்திய 73 வயதான முதியவர் 15 நாள்களுக்குப் பின்னர் காவல் நிலையத்தைத் தொடர்புக் கொண்ட போது தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகப் புகாரில் தெரிவித்துள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *