WHATSAPP மோசடியில் RM262,669 இழந்த இளைஞர்! காவல்துறை நடவடிக்கை!
- Thinagaren Sanggaren
- 19 Jul, 2025
ஜுலை 19,
வாட்ஸ் ஆப் மூலமாகப் பெறப்பட்ட முதலீட்டில் முதலீடு செய்த தனியார் நிறுவன மேலாளர் RM262,669 பணத்தை இழந்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிக லாபம் பெறும் நிறுவனமாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதாக விளம்பரத்தை நம்பியதாகப் பாதிக்கப்பட்ட 39 வயது தனியார் நிறுவன மேலாளர் நேற்று மாலை ஸ்ரீ அலாம் காவல்நிலையத்தில் புகார் அளித்தாக மாவட்டக் காவல் ஆணையர் முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 25 முதல் ஜூலை 4 வரையில் வெவ்வேறு
வங்கிக் கணக்குகளில் 16 பணப்பரிவர்த்தனைகள் மூலம் RM262,669 செலுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதலீட்டுக்குப்
பின்னர் லாபம் பெற்ற பணத்தை மீட்கும் போது மேலும் அதிகமாகப் பணத்தைச் செலுத்த வேண்டும்
என வலியுறுத்தப்பட்டதால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 39 வயது தனியார் நிறுவன மேலாளர்
காவல் நிலையத்துல் புகார் அளித்தது, சமம்ந்தப்பட்ட வங்கிக் கணக்குகளைச் சோதனையிட்டு
வருவதாக ஸ்ரீ அலாம் மாவட்டக் காவல் ஆணையர் முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



